×

முஸ்லிம்கள் போராட்டம் எதிரொலி: அமரன் படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது. இந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதாக கூறி ‘அமரன்’ படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிட எஸ்டிபிஐ திட்டமிட்டிருந்தது. இதையடுத்து படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து, இந்துக்கள் முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை கெடுக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதேபோல், ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ‘அமரன்’ திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு நேற்று முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Muslims ,Chennai ,Kamal Haasan ,Sivakarthikeyan ,Sai Pallavi ,Rajkumar Periyasamy ,Diwali ,STBI ,
× RELATED ‘உம்ரா’ அழைத்து செல்வதாக ரூ.36.50 லட்சம் மோசடி: சென்னை ஏஜென்ட் மீது வழக்கு