×

இன்ஸ்ட்ராவில் மட்டும் நயன்தாரா கவர்ச்சி காட்டுவது ஏன்?

சென்னை: இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் படு கவர்ச்சியாக நடித்து வந்தார் நயன்தாரா. ‘வல்லவன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’, ‘கஜினி’, ‘வில்லு’, ‘சத்யம்’ உள்பட பல படங்களில் கவர்ச்சியாக நடித்தார். முன்னணி நடிகையாக அவர் வளர ஆரம்பித்ததும் கவர்ச்சிக்கு குட்பை சொல்லிவிட்டார். மேலும் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த பிறகு, ஹோம்லி வேடங்களில் மட்டுமே நடித்தார். திருமணத்துக்கு பிறகும் அதே பாலிசியை பின்பற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டுதான் அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.

அப்போது முதல் அவர் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். எல்லை மீறிய கவர்ச்சியாக அது இல்லை என்றாலும் திரைப்படங்களில் தனது உடல் அழகை காட்ட விரும்பாத நயன்தாரா, இன்ஸ்டாகிராமில் மட்டும் அதுபோல் புகைப்படங்களை வெளியிடுவது ஏன் என நெட்டிசன்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக நேற்று முன்தினம் இரவு அவர் வெளியிட்ட ஒரு கிளாமர் லுக் படத்தை பார்த்து இதை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேட்கிறார்கள். இன்ஸ்ட்ராவில் நயன்தாரா இணைந்தபோது, அவருக்கு 5 மில்லியன் பாலோயர்கள் இருந்தார்கள்.

இப்போது அது 9 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதிக பாலோயர்கள் இருந்தால்தான் பல்வேறு நிறுவனங்களுக்கு இன்ஸ்ட்ராவில் விளம்பரம் செய்ய முடியும். அதன் மூலம் பெரும் வருமானத்தை ஈட்ட முடியும். எனவேதான் அவர் அவ்வப்போது கிளாமர் படங்களை வெளியிட்டு, பாலோயர்களை அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Tags : Nayanthara ,Chennai ,
× RELATED 9 ஸ்கின்ஸ் நிறுவன விளம்பரத்தில் மலையாள...