×

விடா முயற்சி தாமதம் ஏன்?.. ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தகவல்

சென்னை: ‘விடா முயற்சி’ படத்தை முடித்துவிட்ட அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் குறித்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் அளித்த வீடியோ பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரித்துள்ள படம் ‘விடா முயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக தாமதமாகி வந்தது. தீபாவளிக்கு திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் தள்ளிப்போனது. சுப்ரீம் சுந்தர் இது குறித்து கூறியது: இந்த படத்தின் தாமதத்திற்கு லொகேஷனே காரணம். அஜர்பைஜானில் பெரும்பாலான காட்சிகள் படமாகியுள்ளது. அங்கு தட்பவெப்ப நிலை காரணமாக பல நாட்கள் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த படத்தில் ரசிகர்கள் வேற லெவலில் ஒரு அஜித்தை பார்க்கலாம், இது கொண்டாடப்படும் படமாக இருக்கும். அஜித்தை ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் மகிழ் திருமேனி செதுக்கியுள்ளார், கதைக்கான விஷயத்தில் எந்த காம்ப்ரமைஸும் செய்யாமல் முழு ஈடுபாட்டுடன் படம் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது உண்மையாகவே விபத்து நடந்தது, ஆனால் அந்த விபத்தையும் ஆக்‌ஷன் ஆக மாற்றி மெருகேற்றுகிறோம். கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும், மேலும் இது ஒரு மிகப்பெரிய படமாக அமையும். அதேபோல் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஒரு பக்கா கமர்ஷியல் படம், அஜித் நடித்த பில்லாவுக்கு பிறகு அவரை வேற ஒரு ஸ்டைலில் இந்தப் படம் காட்டும். பக்கா பொழுதுபோக்கு படமாக இது இருக்கும். இவ்வாறு சுப்ரீம் சுந்தர் கூறியுள்ளார்.

Tags : Supreme Sundar ,CHENNAI ,Ajith ,Ajith… ,
× RELATED அஜித்துக்கு இயக்குனர் திடீர் கடிதம்