×

கீர்த்தி சுரேஷா இது?.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: ‘பேபி ஜான்’ இந்தி படத்தின் டிரெய்லரில் கீர்த்தி சுரேஷை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம் ‘தெறி’. இதன் இந்தி ரீமேக் படமாக ‘பேபி ஜான்’ படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அட்லி இந்த படத்தை தயாரித்துள்ளார். இதில் சமந்தா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் துப்பட்டாைவ தலையில் அணிந்த கீர்த்தி சுரேஷை பார்த்த ரசிகர்கள், கீர்த்திக்கு என்ன ஆச்சு? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்தி படத்தில் ஸ்லிம்மாக தெரிய வேண்டும் என்பதற்காக அவரது தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றித்தான் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது பற்றி விசாரித்தபோது, பாலிவுட் ரசிகர்களுக்கு ஸ்லிம்மான நடிகைகள்தான் பிடிக்கும். அதனால் விஎஃப்எக்ஸ் மூலம் கீர்த்தி சுரேஷை ஸ்லிம்மாக காட்டியிருப்பதாக தெரியவந்தது. இந்த படத்தில் விஜய் வேடத்தில் வருண் தவனும் எமி ஜாக்சன் வேடத்தில் வாமிகா கப்பியும் நடித்திருக்கிறார்கள்.

Tags : Keerthy Suresha ,Chennai ,Keerthy Suresh ,Vijay ,Samantha ,Amy Jackson ,Atlee ,
× RELATED இயக்குனரை ‘டா’ போட்டு பேசும் கீர்த்தி சுரேஷ்