×

இந்த வாரம் என்ன விசேஷம்?

ஆகஸ்ட் 24, சனி - வரகூர் உறியடி, ஆனந்தவல்லி அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், திருவையாறு, கண்டமங்கலம், வேதாரண்யம், பிள்ளையார்பட்டி, கணபதி அக்ரஹாரம், திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் முதலிய தலங்களில் சதுர்த்தி உற்சவ ஆரம்பம். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி. பாஞ்சராத்திர ஜெயந்தி. முனித்ரயஸ்ரீ ஜெயந்தி.

ஆகஸ்ட் 25, ஞாயிறு- வேளூர் ஸ்ரீவினைதீர்த்த விநாயகர் உற்சவ ஆரம்பம், ஸ்ரீரங்கம் உறியடி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் காலை வெள்ளிக் கேடயத்திலும், இரவு வெள்ளி சிம்மவாகனத்திலும் பவனிவரும் காட்சி.

ஆகஸ்ட் 26, திங்கள் - ஏகாதசி. திருச்செந்தூர் சிவப்பு சாத்தி தரிசனம். மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி காலை ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம். இரவு ராமாவதாரக் காட்சி.

ஆகஸ்ட் 27, செவ்வாய் - துவாதசி. தருமை மகா மாரியம்மன் சம்வத்ஸராபிஷேகம், திருச்செந்தூர் பச்சை சாத்தி தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம்  எழுந்தருளல், பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கமல வாகனத்தில் திருவீதியுலா.

ஆகஸ்ட் 28, புதன் - வடலூரில் மாதபூசம். மாதசிவராத்திரி. பிரதோஷம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளிக் கேடயத்திலும் இரவு ரிஷப வாகனத்திலும் புறப்பாடு.  ஆவணி உற்சவாரம்பம்.

ஆகஸ்ட் 29, வியாழன் - நாகை அதிபத்தர் ஐக்கியம், திருச்செந்தூர் தேரோட்டம். போதாயன அமாவாசை. திருவலஞ்சுழி ஸ்ரீஸ்வேத விநாயகர் திருவீதியுலா. அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை.

ஆகஸ்ட் 30, வெள்ளி - அமாவாசை. திருப்பனந்தாள் பொய்கை குளத்தில் ஸ்ரீபிரம்மனுக்கு சாபம் நீக்கி அருளியது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதியுலா.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி