பலன் தரும் ஸ்லோகம்

(ஆடவர்களுக்கு மனதுக்கேற்ற மண வாழ்க்கை கிட்டச் செய்யும்)

ரக்தரங்கராகா ருணபூஷணாட்யாம்
வீணாதரம் வீடிகதோல்லஸந்தம்
கந்தர்வகன்யாஜனகீயமானம்
விச்வாவஸும் ஸத்ப்ருஹதீம் நமாமி
விஸ்வாவஸுகந்தர்வ ப்ரார்த்தனா

பொதுப்பொருள்: ப்ரஹதி என்ற வீணையை கையில் ஏந்தியவரும், ரக்த வர்ணத்தில் வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் அணிந்து திகழ்பவரும், தாம்பூலம் சேவித்ததால் மணம் வீசும் வாயினையுடையவரும், எப்பொழுதும் கந்தர்வ கன்னிகைகளால் சூழப்பட்டிருப்பவருமான அந்த விஸ்வா வசுவிற்கு தலை வணங்குகிறேன். திருமணத்தடையுள்ள காளையர்கள் இத்துதியை ஜபித்து வந்தால் மனதிற்குப் பிடித்த பெண்ணே மனைவியாகக் கிடைப்பாள்.

Tags :
× RELATED ஐஸ்வர்யம் அருளும் கம்பராய பெருமாள்