×

உப்புச்சீடை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 4 ஆழாக்கு
பொட்டுக்கடலை - ஒரு ஆழாக்கு
தேங்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 300 மி.லி

எப்படிச் செய்வது?

புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காயை துருவிக்கொள்ளவும்.  பொட்டுக்கடலையை தூளாக்கிக் கொள்ளவும். முதலில் துருவிய தேங்காயை சிறிது நேரம் ஆட்டி பின் அரிசியை கழுவிப் போட்டு தண்ணீர் அதிகம் விடாமல் உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். அரைத்த மாவுடன் தூளாக்கிய பொட்டுக்கடலையை சலித்து சேர்த்து பிசைந்து மிகச்சிறிய அளவில் உருட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி (அதிகம் கொதிக்காமல்) சீடைகளை போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி