×

செக்ஸ் இல்லாமல் வாழவே முடியாதா? தாத்தா நடிகரை திருமணம் செய்தார் பிரபல நடிகை

சென்னை: நீண்ட வெண் தாடி கொண்ட தாத்தா நடிகருடனான நடிகையின் மணக்கோல வீடியோ வைரலாகி வரும் நிலையில், ‘செக்ஸ்’ இல்லாமல் வாழவே முடியாதா? என்று அந்த நடிகை ஆவேசமாக கேட்டுள்ளார். மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஆகியோர் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இருவரும் சினிமாக்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளனர். அதேபோல் டி.வி தொடரில் ஒன்றாக நடித்துள்ளனர். இதன்மூலம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்து வந்தனர். கிறிஸ் வேணுகோபால் பெரும்பாலும் தாத்தா வேடங்களில் நடித்தவர்.

திவ்யா ஸ்ரீதருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அந்த இரண்டு பிள்ளைகளும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில் நீண்ட வெண் தாடியுடன் கிறிஸ் வேணுகோபால் மணமேடையில் திவ்யா ஸ்ரீதருக்கு தாலிகட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர்களின் வயது உள்ளிட்ட விஷயங்களைக்கூறி கிண்டலாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதுகுறித்து நடிகை திவ்யா ஸ்ரீதர் கூறுகையில், ‘நான்கு பேருக்கு அறிவித்துத் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டோம். ஆனால், பலரது கமென்ட்டுகள் பாசிட்டிவானதாக இல்லை.

திருமணம் செய்வது அவ்வளவு பெரிய தவறான செயலா? நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைகளையும் கருத்தில்கொண்டு இரண்டாவது திருமணத்திற்கு முடிவு செய்துள்ளோம். நல்ல கமென்ட்டுகள் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு மோசமான கமென்ட்டுகள் வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. நாங்கள் திருமணம்செய்தது செக்ஸுக்காக அல்ல. என் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு ஒரு தந்தை வேண்டும். என் கணவர் எனக் கூறுவதற்கு எனக்கு ஓர் அடையாளம் வேண்டும். வாழ்க்கை என்பது செக்ஸ் மட்டும்தான் என எங்காவது எழுதி வைத்திருக்கிறார்களா?’ என ஆவேசமாக கேட்டுள்ளார்.

 

Tags : Chennai ,MALAYALAN ,CINNATHRA ,CHRIS VENUGOPAL ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...