×

டாக்டர் ஆக நடிக்கும் யாஷிகா ஆனந்த்

சென்னை: டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார்.

இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின்.ஆர் பணியாற்றுகிறார்.

Tags : Yashika Anand ,Dr. ,MA Bala ,Twinkle Labs Productions ,Poojai ,
× RELATED தும்பையின் பயன்கள்!