×

ரூ.34 கோடி வீடு விவகாரம் நாக சைதன்யாவுக்கு சமந்தா நோட்டீஸ்?

ஐதராபாத்: நாக சைதன்யாவும், சமந்தாவும் திருமணத்திற்கு முன்பு ஒரு பிளாட் ஒன்றை ஐதராபாத்தில் வாங்கினார்கள். அதன் அப்போதைய மதிப்பு ரூ.34 கோடி. அவர்கள் விரும்பியபடி அந்த வீட்டினை வடிவமைத்து உருவாக்கினர். அது அவர்களது கனவு வீடாகவே இருந்தது என்றே கூறலாம். ஆனால் இந்த பிளாட் வாங்கும் போது, நாக சைதன்யாவை விட சமந்தா தான் அதிகம் செலவு செய்ததாக சில இடங்களில் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் பிறகு நாக சைதன்யாவுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதா தகவல்கள் வெளியாகி வருகின்றது. சோபிதாவுடனான திருமணத்திற்கு பிறகு, அந்த பிளாட்டில் தான் குடியேற இருப்பதாக நாக சைதன்யா கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முடிவிற்கு ஷோபிதா சம்மதிக்கவில்லை என்றும்.

அதில் தங்குவதன் மூலம், முன்னாள் மனைவியின் நினைவுகளை திரும்பத் திரும்ப வரும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பிளாட்டில் யாரும் இல்லை என்றும், அதை விரைவில் சோபிதாவிற்கு, சைதன்யா பரிசளிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை வாங்கியதில் தனக்கிருந்த பங்கை திருப்பித் தர வேண்டும் என சமந்தா நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags : Samantha ,Naga Chaitanya ,Hyderabad ,
× RELATED மழலையர் பள்ளி நடத்தும் சமந்தா