×

கோயிலில் வலம் வந்து வழிபடுவது நன்மை பயக்கும்

கோயில் தரிசனத்துக்குப் போகும் இளைஞர்களிடம் பெரியோர்கள் ‘கோயிலை வலம் வர மறந்துவிடாதே ’ என்று கூறுவதுண்டு. கோயிலை வலம் வர வேண்டும் என்பதே இப்போதனை. இதற்கு பின்னால் ஒரு அர்த்தமும், சாஸ்திரமும் உண்டு.காலையிலும் மாலையிலும் பொதுவாக உடற்பயிற்சியின் வேளைகளாக நாம் பழக்கப்படுத்தியுள்ளோம். இது இயலாதவர்களுக்கு கோயில் உடல் பயிற்சியாக அமையும். சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் எளிதில் செய்யக்கூடிய ஓர் உடல் பயிற்சியே கோயிலை வலம் வருதல். காலணிகளைக் களைந்து வலம் வருதல், தோப்புக்கரணமிடுதல், கும்பிடுதல் முதலியவை உடற்பயிற்சியின் சக்தியை அதிகரிக்கின்றது. இவ்வாறு நாமறியாமலே உடலிலுள்ள எல்லா முட்டுக்களும், தசைகளும் நன்றாக அசைவடையும் ஓர் உடற்பயிற்சியே கோயில் தரிசனத்தில் நாம் செய்வது.

வலம் வைத்தால் என்பது வலது பக்கம் சுற்றி வருதல் என்பதே. பொதுவாக கோயில் வலம் வருவது வலதுபக்கமாகத் தான். இப்படி செய்வதில் நாம் இறைவனுடன் கூடுதல் நெருங்குகின்றோம் என்பது ஆசாரியர்ப்படிப்பினை கோயில் வலம் வரும் போது முன் ஜென்மங்களில் செய்த பாவமும் அழிந்து விடும் என்பது நம்பிக்கை.

 ‘யானி யானிச் பாபானி ஜன்மாந்தர கிருதா -நிச
தானி தானி வினஸ்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே’

- எஸ்.கிருஷ்ணஜா பாலாஜி

Tags :
× RELATED காமதகனமூர்த்தி