×

கார போளி

தேவையான பொருட்கள்:

பூரணம் செய்வதற்கு தேவையானவை

உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - பொடியாக
நறுக்கியது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
காரப்பொடி - 1 / 2 தேக்கரண்டி
கரம்மசாலா - 1 / 4 தேக்கரண்டி
தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
கடுகு - 1 / 4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
மாவிற்கு - தேவையானவை
கோதுமை மாவு - 3/4 கப்
உப்பு - 1 / 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி-  2 சிட்டிகை

எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

மாவிற்கு கொடுத்தவற்றை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். தளற பிசைந்து வைத்து அதன் மேல் எண்ணெய் விட்டு அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும். உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பச்சை மிளகாய் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். மசித்த உருளைக் கிழங்கு போட்டு மஞ்சள் பொடி உப்பு, தனியா பொடி கரம் மசாலா, காரப்பொடி சேர்த்து நன்றாக கிளறவும். கொத்தமல்லி இலை தூவி நன்றாக மசித்து பிசைந்து வைக்கவும். மசாலாவை பத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அதேபோல் மாவையும் பத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பேக்கிங் பேப்பர்/பாலிதீன்பேப்பர்/வாழைஇலையில் மாவு வைத்து சப்பாத்தி போல் கையால் நன்கு தட்டிக் கொள்ளவும். அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலா உருண்டை வைத்து மாவை வைத்து மூடவும். கையால் மறுபடியும் நன்றாக தட்டிக் கொள்ளவும். தோசை கல்லில் போட்டு எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும். அருமையான கார போளி ரெடி.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்