×

ஆந்திரா, தெலங்கானாவுக்கு பிரபாஸ் ரூ.5 கோடி, சிரஞ்சீவி ரூ.1 கோடி

திருமலை: ஆந்திரா, தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு ஆகியோர் ஏற்கனவே வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில் நடிகர் சிரஞ்சீவி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.50 லட்சம் என 2 மாநிலத்திற்கும் மொத்தம் ரூ.1 கோடி வழங்கினார். நடிகர் பிரபாஸ் ரூ.5 கோடியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி தனது ஹெரிடேஜ் பால் நிறுவனம் மூலம் ஆந்திரா, தெலங்கானாவுக்கு தலா ரூ.1 கோடி என ரூ.2 கோடி நிவாரண நிதி வழங்கி உள்ளார்.

The post ஆந்திரா, தெலங்கானாவுக்கு பிரபாஸ் ரூ.5 கோடி, சிரஞ்சீவி ரூ.1 கோடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhas ,Chiranjeevi ,Andhra ,Telangana ,Tirumala ,Andhra Pradesh ,Jr. NTR ,Balakrishna ,Mahesh Babu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலங்கானா ஆந்திராவுக்கு சிம்பு நிதியுதவி