×

பாலமலை முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி விழா

க.பரமத்தி:  பாலமலை முருகன் கோயிலில் நடந்த 20ம் ஆண்டு திருப்புகழ் திருப்படி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் பாலமலை பாலசுப்பிரமணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 20ம் ஆண்டு திருப்புகழ் திருப்படி விழா நடைபெற்றது.  விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோயிலை சுற்றி கிரிவலம் வருதல். பின்பு விநாயகர் வழிபாட்டு திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அனைத்து படிகளுக்கும் தலைவாழை இலை வைத்து அதன்மேல் பச்சரிசி, தேங்காய், பழம் வைத்து மலர்களை தூவி தீபம் ஏற்றி திருப்புகழ் பாடி ஒவ்வொரு படியாக பூஜைகள் நடத்தப்பட்டன.

இதே போல் கோயிலில் உள்ள 55 படிகளுக்கு திருப்படி பூஜை நடைபெற்றது. திருப்புகழை கரூர் குமாரசாமிநாத தேசிகர் ஓதுவார் குழுவினரின் இசை சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் பல்வேறு மலர்களை தூவி வழிபாடு செய்தனர். விழாவில் கோயில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி