×

விதைத்தது மிகுதி அறுத்ததோ குறைவு

'கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் இருந்தபோது வெற்றியும், அவருக்கு உண்மையற்றவர்களாய் நடக்கும்போது அழிவும் ஏற்படும்.’’ அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள். நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்.‘‘இவர்கள் என் மக்கள்’’ என்பேன் நான். ‘‘ஆண்டவர் எங்கள் கடவுள்’’ என்பார்கள் அவர்கள். ‘‘ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள். அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. இந்தக் கோயில் பாழடைந்து கிடக்கும் இந்த நேரத்தில் நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா? ஆதலால் இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள். உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.நீங்கள் விதைத்தது மிகுதி; அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள். ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடிக்கிறீர்கள்.

ஆனால், நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள். ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான். உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள் என்று சொல்கிறார் ஆண்டவர். எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள். என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள். அது எனக்கு உகந்ததாய் இருக்கும். அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன் என்று சொல்கிறார் ஆண்டவர். மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள். ஆனால், கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்தபோது அதையும் நான் ஊதித்தள்ளி விட்டேன் ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருந்தீர்கள். எனவே வானம் உங்களுக்கு பனி பெய்வதை நிறுத்தி விட்டது. நிலமும் விளைச்சல் தர மறுத்துவிட்டது.

மேலும் நாடும் மலையும் கோதுமையும் திராட்சை ரசமும் எண்ணெயும், நிலத்தின் விளைச்சலும் மனிதரும் கால்நடைகளும் உங்கள் உழைப்பின் பயன் அனைத்தும் வறட்சியால் வாடுமாறு நான் செய்திருக்கிறேன்.’’  (ஆகாய் 2:211) இன்று ஆண்டவரின் கோயிலுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது. இனிமேல் நிகழப்போவது என்ன என்பதைக் கவனமாகப் பாருங்கள். விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்து விடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும், மாதுளையும், ஒலிவ மரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் நான் உங்களுக்கு ஆசி வழங்குவேன். ஏனெனில், உன்னையே நான் தெரிந்து கொண்டேன் என்கிறார் ஆண்டவர். ஆண்டவரது கோயில் இன்னும் கட்டியெழுப்பப்படவில்லை.

அதை விரைவில் கட்டியெழுப்புமாறு, தூய்மையாக்கப்பட்டு புத்துயிர் பெற்றுள்ள மக்களுக்குச் செழுமையையும், அருள்வதாக ஆண்டவர் வாக்களிக்கிறார்.‘‘கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் அவரால் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டு, நல்லவை நடக்கும்போது மட்டும் அவரைப் போற்றித் துதிப்பவர்களாகவும், சோதனைக் காலங்களில் அவரை விட்டு விலகுபவர்களாகவும் வாழ்கிறோம். இப்படி வாழாமல், எங்கள் அன்பின் ஆண்டவனே! எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்திட வரம் தாரும். எந்தச் சூழ்நிலையிலும் உம்மீது உள்ள நம்பிக்கை குறையாமல் இருக்க உதவும். இயேசுவே! உம்மையே தொடர்ந்து பின்பற்றி  உம்மில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டு வாழ்ந்திட அருள்தாரும் என மன்றாடுவோம்.’’


‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Tags :
× RELATED காமதகனமூர்த்தி