×

மேலூர் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மேலூர்: மேலூர் நாகம்மாள் கோயிலின் ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். மேலூர் திருவாதவூர் ரோட்டில் அமைந்துள்ள நாகம்மாள் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் 5 ஆயிரம் பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். நேற்று மாலை 6 ஆயிரத்து 540 பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இவர்களின் ஊர்வலம் மண்கட்டி தெப்பகுளம், பெரியகடை வீதி, அழகர்கோவில் ரோடு, செக்கடி வழியாக கோவிலை சென்றடைந்தது. மாலை துவங்கிய ஊர்வலம் இரவு வரை நீடித்தது.

இதனால் மேலூரில் போக்குவரத்து மாற்றப்பட்டது. வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலை வழியே திருப்பி விடப்பட்டது. பஸ் ஸ்டாண்டிற்கு எந்த உள்ளூர் பஸ்களும் வரவில்லை. அவை அனைத்தும் இரண்டு கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்