×

மழவேனிற்காடு முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் மழவேனிற்காடு ஆகாச முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேனிற்காடு ஆகாச முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொடடி கடந்த 16ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து வண்டிப்பேட்டை களிச்சியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். அன்று மாலை முதல்கால யாகபூஜை நடந்தது. நேற்று இரண்டாம்கால பூஜை நடந்தது. பின்னர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி