×

கடலாடி பத்திரகாளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

சாயல்குடி: கடலாடி பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடந்தது. கடலாடி பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் வைகாசி மாத வருடாந்திர பொங்கல் திருவிழா கொடியேற்றம், காப்புக் கட்டுதல், முத்து பரப்புதலுடன் கடந்த வாரம் துவங்கியது. தினமும் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீப ஆராதனை நடந்தது. அம்மனுக்கு சுமங்கலிபூஜை நடத்தப்பட்டு மாவிளக்கு எடுத்தனர். திருவிளக்கு பூஜை, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம்கண் பானை எடுத்தல் போன்ற நிகழச்சிகள் நடந்தன.
உற்சவ அம்மன் தேர் வீதி உலா நடந்தது.

உரி அடித்தல், புலி வேஷம் ஆடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. 10 நாட்கள் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை எடுத்து பெண்கள் கடலாடியின் முக்கிய வீதிகளில் உலா வந்து, வடக்கு ஊரணியில் கரைத்தனர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடி இறக்கத்துடன் நேற்று திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கடலாடி மற்றும் சென்னை சத்திரிய நாடார்கள் உறவின்முறையினர் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி