×

அகோரி வேடத்தில் சாயாஜி ஷிண்டே

 

சென்னை: டி.வி நடிகர் சித்து ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம், ‘அகோரி’. இதில் சாயாஜி ஷிண்டே அகோரி வேடத்தில் நடிக்கிறார். அவரது காட்சி ஹரித்துவார் செட் மற்றும் கேரளா காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் படமாக்கப்பட்டன. அவருடன் ஏராளமான அகோரிகள் நடித்தனர். மற்றும் ‘சாஹோ’ ஜக்குல்லா பாபு, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மைம் கோபி, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, சரத், டிசைனர் பவன் நடித்துள்ளனர். வசந்த் ஒளிப்பதிவு செய்ய, 4 மியூசிக்ஸ் இசை அமைத்துள்ளது. மோஷன் பிலிம் பிக்சர் சார்பில் சுரேஷ் கே.மேனன் தயாரிக்க, டி.எஸ்.ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். சிவனடியாராக இருக்கும் ஒரு அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை. பி.வி.ஆர் சினிமாஸ் வெளியிடும் இப்படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

The post அகோரி வேடத்தில் சாயாஜி ஷிண்டே appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sayaji Shinde ,Agori ,Chennai ,Sidhu ,Chayaji ,Shinde Agori ,Kerala jungle ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...