×

இவானா நடிக்கும் மதிமாறன்

சென்னை: பாலா இயக்கிய ‘நாச்சியார்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக தமிழில் அறிமுகமான மலையாள நடிகை இவானா, பிறகு சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் நடித்தார். அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தில் அவரது ஜோடியாகவும், ‘எல்ஜிஎம்’ படத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாகவும் நடித்தார். தற்போது ‘கள்வன்’, ‘செல்ஃபிஷ்’ ஆகிய படங்களில் நடித்து வரும் இவானா, ‘மதிமாறன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் வெங்கட் செங்குட்டுவன், ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பவா செல்லத்துரை, பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் நடித்துள்ளனர். இப்படத்தை ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. பாலா உதவியாளர் மந்த்ரா வீரபாண்டியன் எழுதி இயக்கியுள்ளார். கே.பர்வேஸ் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். ‘ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்’ என்ற பழமொழியை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தன்னுடன் இரட்டையராகப் பிறந்த சகோதரியை தேடும் ஹீரோவின் தேடல்தான் கதை. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. பாபின்ஸ் ஸ்டுடியோஸ் படத்தை வெளியிடுகிறது.

The post இவானா நடிக்கும் மதிமாறன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ivana ,Chennai ,GV Prakash Kumar ,Bala ,Sivakarthikeyan ,Pradeep Ranganathan ,LGM ,Mathimaran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஷிவானி