×

டிச.22ல் எங்க வீட்ல பார்ட்டி

 

சென்னை: ‘அகிலா முதலாம் வகுப்பு’, ‘கணினியும் கழனியும்’ ஆகிய படங்களை தொடர்ந்து கே.சுரேஷ் கண்ணா எழுதி இயக்கியுள்ள படம், ‘எங்க வீட்ல பார்ட்டி’. ஜி.பி.ஆர்.எஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவப்பிரகாஷ், சோமனூர் மஞ்சுளா ரவிகுமார் தயாரித்துள்ளனர். சிவப்பிரகாஷ், யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் நடித்துள்ளனர். ஆர்.பாலா ஒளிப்பதிவு செய்ய, வி.கோபி பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சுரேஷ் நாராயணன், தளபதி ராம்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர். சுரேஷ் சர்மா பின்னணி இசை அமைத்துள்ளார். முட்டம் மற்றும் நாகர்கோயிலில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பேஸ்புக் மூலம் பழகிய சில இளைஞர்களும், பெண்களும் ஒரு இடத்தில் சந்தித்து பார்ட்டி கொண்டாடு கின்றனர். அப்போது ஒரு பெண் படுகொலை செய்யப்படுகிறாள். அவளை யார் கொன்றது, என்ன காரணம் என்பது கதை. வரும் 22ம் ேததி படம் திரைக்கு வருகிறது.

The post டிச.22ல் எங்க வீட்ல பார்ட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,K. Suresh Khanna ,Sivaprakash ,Somanur Manjula Ravikumar ,GPRS Productions ,Shivaprakash ,Yatra ,Sasana ,Hansi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தங்கர் பச்சான் மகன் ஹீரோவாக நடிக்கும் பேரன்பும் பெருங்கோபமும்