×

ஆன்லைன் மோசடி கதை இ-மெயில்

 

சென்னை: தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து இந்தியிலும் நடித்திருப்பவர், ராகினி திவேதி. கன்னட முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர், தமிழில் ‘அறியான்’, ‘நிமிர்ந்து நில்’, ‘கிக்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள ‘இ-மெயில்’ என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார். எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். ஹீரோவாக ‘முருகா’ அசோக் குமார், 2வது ஹீரோயினாக போஜ்புரி, இந்திப் படங்களில் நடித்துள்ள ஆர்த்தி , 2வது ஹீரோவாக ஆதவ் பாலாஜி, வில்லனாக பில்லி முரளி ஆகியோருடன் மனோபாலா, மனோகர் நடித்துள்ளனர். செல்வம் முத்தப்பன் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு அவினாஷ் கவாஸ்கர் இசை அமைத்துள்ளார். ஜூபின் பின்னணி இசை அமைத்துள்ளார். ஆன்லைன் விளையாட்டிலுள்ள மோசடிகளை அம்பலப்படுத்தும் கதையுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அமீர், நடிகர் மஹத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா, கோமல் சர்மா வெளியிட்டனர்.

The post ஆன்லைன் மோசடி கதை இ-மெயில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Ragini Dwivedi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கொட்டுக்காளி படத்துக்காக சூரி குரலை மாற்றிய மர்மம்