×

ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா காதல் திருமணம்

 

சென்னை: திரைக்கு வந்த ‘அவள் வருவாளா’, ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘ஏ1’, ‘எல்.கே.ஜி’, ‘கூர்கா’, ‘அண்ணாத்த’, ‘பீஸ்ட்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘பத்து தல’, ‘கட்டா குஸ்தி’, ‘ஜெயிலர்’, ‘டிடி ரிட்டன்ஸ்’, ‘மார்க் ஆண்டனி’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ உள்பட ஏராளமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர், ரெடின் கிங்ஸ்லி (46). அவருக்கும், நடிகை சங்கீதாவுக்கும் நேற்று திடீரென்று திருமணம் நடந்தது. விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ‘எல்.கே.ஜி’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற படங்களிலும், டி.வி தொடர்களிலும் சங்கீதா நடித்துள்ளார். நடிகரும், டான்சருமான சதீஷ் ரெடின் கிங்ஸ்லிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், ‘இது எந்தப் படத்துக்கான செட்டும் இல்லை. இது உண்மை’ என்று குறிப்பிட்டுள்ளார். 1998ல் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘அவள் வருவாளா’ படத்தில் டான்சராக அறிமுகமானவர், ரெடின் கிங்ஸ்லி. பிறகு சென்னை, பெங்களூரு உள்பட பல நகரங்களில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய அவர், தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

The post ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா காதல் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Redin Kingsley ,Sangeeta Love ,Chennai ,LKG ,Sangeetha ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...