×

நடனக்கலைஞர்களை கவுரவிக்கும் விழா: 30ம் தேதி நடைபெறுகிறது

 

சென்னை: தமிழ்ப் படவுலகில் சாதனை படைத்த 200க்கும் மேற்பட்ட மூத்த நடனக்கலைஞர்களை கவுரவிக்கும் ‘டான்ஸ் டான்’ என்ற விழா, சென்னை காமராஜர் அரங்கில் வரும் 30ம் தேதி மாலை 3 மணியளவில் டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குனருமான தர் தலைமையில் நடக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில் டி.கே.எஸ்.பாபு, அசோக் ராஜா, பாபா பாஸ்கர், லலிதா-மணி, குமார் சாந்தி, வசந்த், விமலா, சம்பத், ஹரீஷ் குமார், வாமன் மாலினி, அக்‌ஷரா தர் கலந்து கொண்டனர். அப்போது தர் பேசியதாவது:

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்து நடனத்தை பயிற்றுவித்த நடனக்கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை. 1950களில் தொடங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக்கலைஞர்கள் பணியாற்றி இருக்கின்றனர். புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக்கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை நினைவுகூர்ந்து, இந்த விழாவில் கவுரவிக்கப்படுகின்றனர். பாடல் காட்சியை வடிவமைக்கும் நடன இயக்குனர்களுக்கும் ராயல்டி தொகையின் ஒரு பகுதியை வழங்க வேண்டும். படத்தின் டைட்டில் கார்டில் நடன இயக்குனரின் பெயருடன், அவர் எந்தப் பாடலுக்கு நடனம் வடிவமைத்தார் என்ற விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

The post நடனக்கலைஞர்களை கவுரவிக்கும் விழா: 30ம் தேதி நடைபெறுகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Dance Don ,Kamarajar Arena ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...