×

நயன்தாரா என்னை டம்மி ஆக்கினாரா: சமந்தா பதில்

 

சென்னை: ‘சாகுந்தலம்’ என்ற படத்தில் சமந்தா நடித்திருந்தார். இதில் அதிதி பாலனும் சமந்தாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுகுறித்து சமந்தாவிடம். ‘எப்படி உங்களுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தை உங்கள் படத்தில் அனுமதித்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சமந்தா கூறியதாவது: ‘ஏன், நான் கீர்த்தி சுரேஷின் ‘மகாநடி’ என்ற படத்தில் நடிக்கவில்லையா? எனக்குப் புரியவில்லை, ஏன் ஒரு நடிகை இன்னொரு முன்னணி நடிகையின் படத்தில் நடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்? இன்னும் சொல்லப்போனால், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா ஹீரோயின். நான் இரண்டாவது ஹீரோயின் என்று சொன்னார்கள். அப்படத்தில் நடிக்க நானும் ஒப்புக்கொண்டேன்.

அப்போது, ‘எனது கதாபாத்திரத்தை நயன்தாரா டம்மியாக்கி விடுவார். இந்தப் பழக்கம் நயன்தாராவுக்கு இருக்கிறது. இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்றால், இரண்டாவது ஹீரோயினை நயன்தாரா டம்மியாக்கி விடுவார்’ என்று, என்னை நடிக்க வேண்டாம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் அப்படி எதுவும் எனக்கு நடக்கவில்லை. படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நயன்தாரா துணையாக இருந்தார். அப்படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய கதாபாத்திரத்துக்கும் நல்ல ஸ்கோப் இருந்தது. இது ஒரு நல்ல முன்னெடுப்பு என்று நான் கருதுகிறேன். இன்னார் இந்தப் படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்வது எனக்கு வியப்பாக இருக்கும். அவரவர் கதாபாத்திரம் எப்படி இருக்கிறது? அது தங்களுக்கு நிறைவாக இருக்கிறதா என்று பார்த்தாலே போதுமானது’ என்று சமந்தா கூறியுள்ளார்.

The post நயன்தாரா என்னை டம்மி ஆக்கினாரா: சமந்தா பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Samantha ,Chennai ,Aditi Balan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உடல்நலம் குறித்த டிப்ஸ் வழங்க யூடியூப் சேனல் தொடங்கினார் சமந்தா