×

அனிமல் படத்தை பாராட்டிய நடிகைக்கு நெட்டிசன்கள் ‘டோஸ்’

சென்னை: ‘அனிமல்’ படத்தை பாராட்டியதால் திரிஷாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். ரன்பீர் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா நடித்துள்ள இந்தி படம் ‘அனிமல்’. இப்படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். அனிமல் படத்தில் நிர்வாண காட்சிகள், படுக்கையறை காட்சிகள், ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டிருந்தார்.

அதில் ‘அனிமல் திரைப்படம் ஒரு ‘கல்ட்’ திரைப்படம்’ என்றும், மிக நேர்த்தியாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். நெட்டிசன்கள் வெளியிட்ட கருத்தில் சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் விவகாரத்தில் பெண்களின் கண்ணியம் பற்றி பேசிய திரிஷா. தற்பொழுது அனிமல் திரைப்படத்தை கல்ட் என்று கூறி பாராட்டி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று கூறி தொடர்ச்சியாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து திரிஷா அவர் போட்ட அந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இருந்து நீக்கிவிட்டார்.

The post அனிமல் படத்தை பாராட்டிய நடிகைக்கு நெட்டிசன்கள் ‘டோஸ்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Netizens ,Trisha ,Ranbir Kapoor ,Bobby Deol ,Rashmika ,Sandeep Reddy Vanga ,Nirvana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு...