×

கலைஞர் நூற்றாண்டு விழா ஜன.6ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: திரையுலகம் சார்பில் டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஜனவரி 6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து ‘கலைஞர் 100’ விழா நடத்துகிறோம்.

இந்த மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா, வருகிற 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தோம். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முதல்வர் அவர்களும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். அதனை கருத்தில் கொண்டு 24ம் தேதிக்கு நடக்கவிருந்த விழாவை 6.1.24 சனிக்கிழமை அன்று மாற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா ஜன.6ம் தேதிக்கு மாற்றம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Tamil Film Producers Association ,Kollywood Images ,
× RELATED தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!