×

விஜய் சேதுபதியின் டிரெயின் ஷூட்டிங் துவங்கியது

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். டிரெயின் திரைப்படம் தனது பயணத்தை தொடங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தாடி மாற்று மீசையுடன் விஜய் சேதுபதி இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரயில் தடம் மற்றும் ரயில் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கும் 11வது படமாக இது உருவாகிறது. விடுதலை 2, மகாராஜா, ஆறுமுக குமார் இயக்கும் படம் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சைக்கோ. இவர்கள் இருவரும் இணையும் டிரெயின் படத்துக்கு நேற்று பூஜை போடப்பட்டது. அத்துடன் படப்பிடிப்பும் துவங்கியது. மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

The post விஜய் சேதுபதியின் டிரெயின் ஷூட்டிங் துவங்கியது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi ,Chennai ,Mishkin ,Kalaipuli S. Thanu ,V Creations ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...