×

பூஜா காதல் திருமணம்

தமிழில் ‘கொக்கி’ படத்தில் அறிமுகமானவர், பூஜா காந்தி. பிறகு ‘வைத்தீஸ்வரன்’, ‘தொட்டால் பூ மலரும்’, ‘திருவண்ணாமலை’ ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் புதுப்பட வாய்ப்புகள் குறைந்ததும் கன்னடப் படங்களில் நடிக்க ஆரம்பித்து, அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூஜா காந்தி, சினிமாவில் பிசியாக இருந்தபோதே கர்நாடக மாநில அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த 2013ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பி.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெய்ச்சூரில் போட்டியிட்டார்.

ஆனால், தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வந்த அவர், 40வயது வரை திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்தார். இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த விஜய் என்ற தொழிலதிபரை இன்று திருமணம் செய்கிறார். பெங்களூருவில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் நடத்தி வரும் விஜய்யும், பூஜா காந்தியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

The post பூஜா காதல் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pooja Love ,Pooja Gandhi ,Uttar Pradesh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச்...