×

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

‘ஜி ஸ்குவாட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார். மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ‘ஜி ஸ்குவாட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் தொடங்கியுள்ளார்.இதுப்பற்றி லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் தான் ‘ஜி ஸ்குவாட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பதாகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்க உள்ளதாகவும் கூறி உள்ளார். மேலும் மக்கள் அனைவரும் இதுவரை தனக்கு அளித்த ஆதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lokesh Kanagaraj ,G Squad ,Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் ஆனார் லோகேஷ் கனகராஜ்