×

உடல் உறுப்புகளை தானம் செய்த படக்குழு

 

சென்னை: ‘உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும்’ என்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, ‘மார்கழி திங்கள்’ படக்குழுவினர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர். இதையொட்டி மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்த தயாரிப்பாளர் சுசீந்திரன், இயக்குனர் மனோஜ் பாரதிராஜா, ஹீரோ ஷியாம் செல்வன்,

ரக்‌ஷணா, ஆர்.டி.பன்னீர் செல்வம், அபிநயா, ரேணுகா தேவி, தர்ஷன், ஹெர்ஷன், கவின், டி.சூர்யா, அசோக் குமார், வர்ஷினி, நக்‌ஷா சரண், ஐ.பி.முருகேஷ் பாபு, டி.இளங்கோ உள்பட 16 பேர், தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவங்களை வழங்கினார்கள். அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிர மணியன் படக்குழுவினரைப் பாராட்டினார். இதுகுறித்து தயாரிப்பாளரும், இயக்குனருமான சுசீந்திரன் கூறுகையில், ‘உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, மக்களின் நல்வாழ்வு மீது அவருக்கு இருக்கின்ற

ஆர்வத்தைக் காட்டுகிறது. இதையடுத்து ‘மார்கழி திங்கள்’ படக்குழுவினர் எங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளோம்’ என்றார். அவரது வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ‘மார்கழி திங்கள்’ படம், வரும் 6ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவரும், இளையராஜாவும் இணைந்துள்ளனர். அவர்கள் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் ‘நாடோடி தென்றல் ’ என்பது குறிப்பிடத்தக்கது.

The post உடல் உறுப்புகளை தானம் செய்த படக்குழு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Margazhi Tingal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து