×

ஒயின் ஷாப் மோதல் கதை சாலா

சென்னை: பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி.விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ள படம், ‘சாலா’. இது ரஸ்டிக் அன்ட் ரியலிஸ்டிக் திரில்லர்படமாக உருவாகியுள்ளது. தீவிரமான மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடந்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இப்படம் பேசுகிறது. ஒயின் ஷாப் ஒன்றை குத்தகைக்கு எடுக்கும் விஷயத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதல் மற்றும் அதற்குப் பிறகான பகை குறித்து இப்படம் சொல்கிறது.

எஸ்.டி.மணிபால் எழுதி இயக்கிஇருக்கிறார். இவர் ‘தொடரி’, ‘காடன்’, ‘கும்கி 2’ போன்ற படங்களில் பிரபு சாலமனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். சாலமன் என்கிற சாலா கேரக்டரில் தீரன் நடித்துள்ளார். மற்றும் ரேஷ்மா, சார்லஸ் வினோத், நாத், அருள்தாஸ், சம்பத் ராம் நடித்துள்ளனர். ரவீந்திர நாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தீசன் இசை அமைத்துள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை வெளியிடுகிறார்.

The post ஒயின் ஷாப் மோதல் கதை சாலா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,People Media Factory ,TG Viswa Prasad ,Vivek Kuchibotla ,Kathi Sala ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...