×

10 ஆண்டுகள் காத்திருந்து நடித்த படம் ரத்தம்: விஜய் ஆண்டனி

சென்னை: சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி நடித்துள்ள படம், ‘ரத்தம்’. வரும் 6ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. தனது மூத்த மகள் மீரா இறந்த சில நாட்கள் இடைவெளியில், முதல்முறையாக விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய சி.எஸ்.அமுதன், ‘எப்போதுமே படத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்துப் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று அப்படி இல்லை. எனது அப்பா இறந்தபோது, திரைத்துறையிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்தவர் விஜய் ஆண்டனி மட்டுமே. அப்போது அவர் என்னிடம், ‘நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்’ என்றார். அன்று அவர் எனக்கு சொன்னதையே இன்று நான் அவருக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்’ என்று, உருக்கமாகப் பேசினார்.

பிறகு பேசிய விஜய் ஆண்டனி, ‘அமுதன் எனது நெருங்கிய நண்பர். அவரது தந்தை எனக்கு மியூசிக் சொல்லிக்கொடுக்க மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால், நான் மியூசிக் கற்றுக்கொள்ளாமலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன் என்று, அவருக்கு என்மீது லேசான கோபம் இருந்தது. அமுதனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த சந்தர்ப்பம் அமைந்தது’ என்றார். விஜய் ஆண்டனி தனது பேச்சில் மூத்த மகளின் இறப்பு, இளைய மகளை தன்னுடன் அழைத்து வந்தது குறித்து எதுவும் பேசவில்லை.

The post 10 ஆண்டுகள் காத்திருந்து நடித்த படம் ரத்தம்: விஜய் ஆண்டனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Amuthan ,Vijay Antony ,Mahima Nambiar ,Ramya Nambiar ,Nandita Shwetha ,Shadows Ravi ,Antony ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மீனாட்சி சௌத்ரி ஃபிட்னெஸ்