×

தயாரிப்பாளர்களின் பாலியல் தொந்தரவு: இஷா குப்தா பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: பாலிவுட் நடிகையும், தமிழில் வெளியான ‘யார் இவன்’ என்ற படத்தில் நடித்தவருமான இஷா குப்தா, தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திரைப்படம் ஒன்றின் இணை தயாரிப்பாளர், என்னுடன் பாலியல் உறவு கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவருடன் பணியாற்றிய அப்படத்தில் பாதிக்கு மேல் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், நான் அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால், அப்படத்தின் தயாரிப்பாளர் அப்படத்தில் இருந்து என்னை நீக்கினார். மற்றொரு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வெளிப்புறப் படப்பிடிப்புக்காக ஒரு இடத்துக்கு சென்றிருந்தோம்.

அப்போது அப்படத்தில் தொடர்புடைய இருவர், ‘அவுட்டோர் ஷூட்டிங்’ என்று சொல்லி, என்னை வெளியே அழைத்துச் சென்றனர். பிறகு இருவரும் என்னிடம் பாலியல் ரீதியாக நெருங்கி வருவதை தெரிந்துகொண்டேன். எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அவர்கள் என்னை அவர்களது பாலியல் திட்டத்தில் சிக்க வைக்க கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால், நான் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, எனது அறைக்கு பெண் ஒப்பனைக்கலைஞரை வரவழைத்து அன்றிரவு தங்க அனுமதித்தேன். இதனால், அந்த நபர்களின் வலையில் நான் சிக்கவில்லை. எளிதாக தப்பித்துவிட்டேன்.

The post தயாரிப்பாளர்களின் பாலியல் தொந்தரவு: இஷா குப்தா பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Isha Gupta ,Mumbai ,Bollywood ,Esha Gupta ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கணவர் யார் என்று தெரிவிக்காத நிலையில்...