×

அரண்மனை 4ல் தமன்னா, ராசி கன்னா

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘அரண்மனை’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது.

ஆர்யா, ராசி கன்னா, சாக்‌ஷிஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரர் – காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தையும் சுந்தர்.சியே இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராசி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி. கணேஷ், டெல்லி கணேஷ், ஜே.பி, விச்சு, கே.ஜி.எஃப். ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைக்கிறார்.

The post அரண்மனை 4ல் தமன்னா, ராசி கன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thamanna ,Zodiac Kanna ,Chennai ,Sunderar ,Arkworm ,Pongal festivities ,Hansika ,Andrea ,Vinay ,Rasi Kanna ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...