- சென்னை
- ஜேம்ஸ் கார்த்திக்
- நியாஸ்
- நெட்கோ ஸ்டுடியோஸ்
- துரை கே.முருகன்
- ராஜேஷ்.எம்.
- இனியா
- சோனியா அகர்வால்
- அருந்ததி நாயர்
- கிரிஷா குழு
- ஆடுகளம் நரைன்
- சென்றாயன்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரித்துள்ள படம், ‘சீரன்’. இயக்குனர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே.முருகன் இயக்கியுள்ளார். ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால், அருந்ததி நாயர், க்ரிஷா குரூப், ஆடுகளம் நரேன், சென்ராயன் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் துரை கே.முருகன் பேசுகையில், ‘தயாரிப்பாளரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைக் கேட்டபோது, என் சிறுவயதில் என் தாத்தா எத்தனை சாதிவெறியுடன் இருந்துள்ளார் என்ற ஞாபகமும், பெருங்கோபமும் சேர்ந்து வந்தது.
இது சாதிவெறியை வலியுறுத்தும் படம் கிடையாது. இனி சாதியே இருக்கக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் படம். இதில் ஜேம்ஸ் கார்த்திக்கும், இனியாவும் இருவிதமான தோற்றங்களில் நடித்துள்ளனர். கிளைமாக்ஸில் ‘காந்தாரா’ படத்தைப் போன்ற ஆக்ரோஷமான ஒரு பாடல் காட்சியில், ஜேம்ஸ் கார்த்திக் சிறப்பாக ஆடியுள்ளார். இக்காட்சி படத்தின் திருப்புமுனையாக இருக்கும்’ என்றார்.
The post சாதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கதை சீரன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.