×

கமல்ஹாசனின் ‘நாயகன்’ ரீ-ரிலீஸ்

கடந்த 2006 ஆகஸ்ட் 25ம் தேதி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ படம், சமீபத்தில் மீண்டும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. அதுபோல், கடந்த 2001ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ படத்தையும் ரீ-ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், கடந்த 1987 நவம்பர் 27ம் தேதி சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடித்து வெளியான ‘பேசும் படம்’ என்ற முழுநீள வசனங்களே இல்லாத படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த வரிசையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

தற்போது இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. வரும் நவம்பர் முதல் வாரத்தில் ‘நாயகன்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இப்படம் கடந்த 1987ல் திரைக்கு வந்தது. சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, குயிலி நடித்திருந்தனர். இளையராஜா இசையில் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’, ‘அந்தி மழை மேகம்’, ‘நான் சிரித்தால் தீபாவளி’, ‘நிலா அது வானத்து மேலே’, ‘தென்பாண்டி சீமையிலே’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது. ‘நாயகன்’ படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இளையராஜா இசை அமைத்த 400வது படம் இது.

 

The post கமல்ஹாசனின் ‘நாயகன்’ ரீ-ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,Gautham Vasudev Menon ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல!: மழை,...