×

சதீஷ் ஜோடியாக மோனிகா

தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிக்க, பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. இது டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. மற்றும் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, தீப்ஸ், உமா பத்மநாபன், வினோத் நடித்துள்ளனர்.

கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார். சதீஷ் ஜோடியாக மோனிகா சின்னகோட்லா, சுரேஷ் ரவி ஜோடியாக மானசா சவுத்ரி நடித்துள்ளனர். கருணாகரன் காமெடி செய்துள்ளார். புகழ், பாவெல் நவகீதன் இருவரும் வித்தியாசமான காமெடி வில்லன்களாக நடித்துள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுகிறது.

 

The post சதீஷ் ஜோடியாக மோனிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Monica ,Sathish ,Pradeep Mahadevan ,The Maphogos ,Sadeesh ,Suresh Ravi ,Praveen Saravanan ,Monika Chinnakotla ,Mansa Southri ,Karunakaran ,Fame ,Pavel ,Sadish Pair ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காதலிக்கு வேறு நபருடன் திருமணம் வாலிபர் தற்கொலை