×

“இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட தொல்.திருமாவளவன்!

மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் “இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் (Member of Parliament) அவர்கள் வெளியிட்டார். “இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேவகுமார். இப்படத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முன்னணி பாடகர்களான பாடகர் பிரசன்னா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பாடல்களை பாடி இருக்கின்றனர்.

The post “இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட தொல்.திருமாவளவன்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : thiramavavavavan ,Maduria Productions ,Manoj Krishnaswamy ,Liberation Leopards Party ,Tholl ,Thirumavavavan ,of Parliament ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்த கிரைம் தப்பில்ல படத்தின் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்