×

ரைசா வில்சன் காயம்

சென்னை: ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைஸா வில்சன், தொடர்ந்து எஃப்.ஐ.ஆர், காஃபி வித் காதல் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் தி சேஸ், தமிழில் காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெருப் பூனை ஒன்று கடித்து அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதாக அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெருப் பூனைகளுடன் விளையாடுவது வீட்டுப் பூனைகள் போல அல்ல எனக் குறிப்பிட்டு சிகிச்சை பெற்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். செல்லப் பிராணி விரும்பியாக இருக்கும் ரைஸா, தனது வீட்டில் பூனைக் குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுடன் விளையாடுவதை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவார். இந்நிலையில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் வருத்தத்தில் இருக்கிறார் ரைஸா. அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

The post ரைசா வில்சன் காயம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ryza Wilson ,Chennai ,Raiza Wilson ,F. GI R. ,Raissa Wilson ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...