×

ஜவுளி கடையில் ரூ.32 ஆயிரம் கொள்ளை

ஈரோடு, ஆக. 4: ஈரோடு, நாடார் மேடு, விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஈரோடு காந்திஜி ரோட்டில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இரண்டு ஜவுளி கடை அடுத்தடுத்து உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் ஜவுளி கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை ஜவுளிக்கடை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது ஒரு கடையில் ஷட்டர் திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உரிமையாளர் வந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.32 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, சக்திவேல் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் ஜவுளிக்கடை ஷட்டரை நெம்பி உள்ளே நுழைந்த மர்ம நபர் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Erode ,Sakthivel ,Vinayagar Koil Street, Nadar Medu, Erode ,Gandhiji Road, Erode ,
× RELATED குறைதீர்க்கும் கூட்டத்தில் 225...