×

வேளாண் கருவிகள் பராமரிப்பு முகாம்: இன்று நடக்கிறது

 

திருப்பூர், ஆக. 2: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் இன்று (சனி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காங்கயம் ஊதியூரில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Tiruppur ,District ,Collector ,Manish ,Agricultural Engineering Department ,Tiruppur district ,Palani Thandayuthapani Swamy Temple Padayatra Devotees' Dormitory Hall ,Kangayam Udungur ,
× RELATED அதிமுகவில் இருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்