×

போதைக்கு எதிரான பிரசாரம்

தொண்டி, ஜூலை 20: தமிழகத்தில் கஞ்சா, மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் அடிமையாகி வருகின்றனர். மேலும் வட்டி, வரதட்சணை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம் தொண்டி ஜாக்தவ்ஹீத் ஜமாத் சார்பில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஜமாத்தின் தலைவர் அகமது பாய்ஸ் போதை பொருளால் ஏற்படும் தீமைகள், மகளிர் குழு லோன் அதிக வட்டியினால் சீரழியும் குடும்பங்கள், வரதட்சனை குறித்து பேசினார். நிர்வாகிகள் பீர், சபியுள்ள, முகமது, அப்துல் காதர் உள்ளிட்டர் கலந்து கொண்டனர், தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

The post போதைக்கு எதிரான பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா