- இரட்டைப் புல்லக் வண்டி ரேஸ்
- Kamudi
- வாழவந்தம்மன் கோவில் திருவிழா
- வாழவந்தாள்புரம்
- பொங்கல்
- புல்லக்
- சிட்டு…
- புல்லக் வண்டி
கமுதி, ஜூலை 20: கமுதி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தில் வாழவந்தம்மன் கோயில் ஆடிப் பொங்கல் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் இவ்விழாவை முன்னிட்டு பூஞ்சிட்டு, தேன் சிட்டு என இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 41 மாட்டு வண்டிகள் மற்றும் சாரதிகள் பங்கேற்றனர். வாழவந்தாள்புரம்-பெருநாழி சாலையில் 8 கி.மீ எல்கை நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டிகளுக்கும், பந்தய வீரர்களுக்கும் ரொக்க பணம், நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமானோர் பார்வையிட்டுச் சென்றனர்.
The post இரட்டை மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.
