×

காரில் கொண்டுசென்ற பட்டாசுகள் பறிமுதல்

 

சிவகாசி, ஜூலை 19: சிவகாசி அருகே காரில் கொண்டு சென்ற பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி அருகே நாரணாபுரம் ரோட்டில் கிழக்கு சப் இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் உரிய அனுமதியின்றி கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த கார்த்திக் (40) என்பவரை கைது செய்தனர்.

The post காரில் கொண்டுசென்ற பட்டாசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,East Sub-Inspector ,Rabiyammal ,Naranapuram Road ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா