சாயல்குடி, ஜூலை 19: கடலாடியிலிருந்து எம்.கரிசல்குளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக கிடப்பதால், புதியதாக சாலை அமைத்து மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலாடி அருகே எம்.கரிசல்குளம், தனியங்கூட்டம், ஒச்சதேவன்கோட்டை, காணீக்கூர், பிள்ளையார் குளம், உசிலங்குளம், வாகைக்குளம், திட்டங்குளம் மற்றும் கூரான்கோட்டை, வெள்ளம்பல், வேடக்கரிசல்குளம், மணிவலசை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர்நிலை, மேல்நிலை கல்வி, கல்லலூரி படிப்பிற்கு கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் கடலாடி வந்து செல்லும் நிலை உள்ளது.
மேலும் இப்பகுதிகளில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கிராம செவிலியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் வெளியூர்களிலிருந்து வருகின்றனர். பிரசித்திபெற்ற கரிசல்குளம் வில்வநாதர்கோயில், காணீக்கூர் பாதாளகாளியம்மன் ஆகிய கோயில்களுக்கு வெள்ளி, செவ்வாய் கிழமைகள் மற்றும் விசேஷ நாட்களில் அதிகளவில் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
The post கடலாடி – எம்.கரிசல்குளத்திற்கு புதிய தார்ச்சாலை appeared first on Dinakaran.
