×

குறிஞ்சான்குளம் பெரியநாயகி அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

அரியலூர், ஜூலை 19: ஆடி முதல் வெள்ளியையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நேற்று நடைபெற்றது. அரியலூர் குறிஞ்சான்குளம் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, ரூ.5 லட்சம் பணத்தாள் அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் எண்ணெய்காரத் தெரு மாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியையொட்டி பால்குட திருவிழா நேற்று நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகர் கோயிலிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்த வந்து முக்கிய வீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், புதிய அங்கனூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள மாரியம்மன் கோயில்களிலும் பால்குட திருவிழா நடைபெற்றது.

The post குறிஞ்சான்குளம் பெரியநாயகி அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Kurinjankulam Periyanayaki Amman ,Ariyalur ,of Aadi ,Paalkudam festival ,Amman ,Ariyalur district ,first ,Periyanayaki Amman ,Kurinjankulam Street ,Ariyalur… ,Kurinjankulam ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா