×

கீழையூர் அருகே சோழவித்தியாபுரம் சந்தனமாதா ஆலய திருவிழா

கீழ்வேளூர், ஜூலை 19: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் சோழவித்தியாபுரத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட பொருளாளர் எஸ்.ஜேசுராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சாகுபடிக்கான தேவையான நீர் கிடைத்து விவசாயம் செழிக்க எதுவாக சிறப்பு திருப்பலி கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

தொடாந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னர் வானவேடிக்கையுடன் புனிதம் செய்யப்பட்ட கொடி ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றபட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி ஜூலை 26ம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்வில் கேகே பட்டி பங்கு தந்தை டேவிட் தனராஜ், சோழவித்தியாபுரம் திருத்தல பேராலய தந்தை டேவிட் செல்வகுமாா், சோழவித்தியாபுர கிறிஸ்தவ சமுதாய தலைவர் சுந்தர்ராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post கீழையூர் அருகே சோழவித்தியாபுரம் சந்தனமாதா ஆலய திருவிழா appeared first on Dinakaran.

Tags : Cholavithiyapuram Chandanamatha Temple Festival ,Keezhayur ,Keelvelur ,Holy Chandanamatha Temple ,Holy Mother ,Velankanni ,Cholavithiyapuram, Keezhayur, Nagapattinam district ,Thanjavur ,Archdiocese Treasurer ,S. Jesuraj ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா