×

கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய மீண்டும் மனு

ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ் நேரில் ஆஜரானார். இந்நிலையில், பங்களாவை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என 10வது குற்றவாளியான ஜித்தன் ஜாய் சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். அதே சமயம், கொடநாடு பங்களாவை இதுவரை 7 முறை சிபிசிஐடி., போலீசார் சோதனை செய்துள்ளதால், மேற்கொண்டு சோதனை செய்ய தேவையில்லை என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி முரளிதரன் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

The post கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய மீண்டும் மனு appeared first on Dinakaran.

Tags : Kodanad bungalow ,Ooty ,Kodanad ,Kerala ,Valayar… ,Dinakaran ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...