சென்னை: 2015ல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.10 லட்சமாக இருந்த நிலையில் தற்போது ரூ.30 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பல்கலை.களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்விக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளில் 200% அதிகரித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களில் இளநிலை மருத்துவ படிப்பை படித்து முடிக்க மொத்தம் ரூ.1.5 கோடி ஆகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 77 கல்லூரிகளில் 11,700 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
The post எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.30 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.
